சேலம் மாநகரில்சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிஆணையாளர் பாலச்சந்தர் தகவல்

Update: 2023-08-06 20:15 GMT

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடனுதவி பெறும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் பாலச்சந்தர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 818 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் 3 ஆயிரத்து 900 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 5 ஆயிரத்து 918 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கடன் பெற புதிதாக பதிவு செய்ய மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களில் நாளை (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் பெரியசாமி, செயற்பொறியாளர் (திட்டம்) பழனிசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு மற்றும் சாலையோர வியாபார சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்