1,461 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.84 கோடி கடன் உதவி

சிவகங்கை மாவட்டத்தில் 1,461 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.84 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவியை ஆணைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

Update: 2022-12-30 18:51 GMT

சிவகங்கை மாவட்டத்தில் 1,461 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.84 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவியை ஆணைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்பிற்கான ஆணைகளை வழங்கி பேசியதாவது.:-

ரூ.84 கோடி கடன் உதவி

கிராமப்புற மக்கள் நலனுக்காகவும், கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், குறிப்பாக, பெண்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மேலும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த தனிநபர் தொழில் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்தி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் வழிவகை செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 1,461 சுயஉதவிக்குழுக்களைச்சேர்ந்த 16,571 உறுப்பினர்களுக்கு ரூ.84 கோடியே 13 லட்சம் மதிப்பிலான பல்வேறு வங்கிக்கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வானதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன், மாவட்டதி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்