கால்நடைகளை விற்பனை செய்யலாம்

திருவண்ணாமலையில் 5 நாள் கால்நடை சந்தை நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனை செய்யலாம் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2022-11-29 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு சிறப்புமாக நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)முதல் 6-ந் தேதி வரை கால்நடை சந்தை நடைபெறவுள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லலாம். எனவே சந்தைக்கு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல விரும்பும் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பெயர், முகவரி, கைபேசி எண், ஆதார் எண் மற்றும் உத்தேசமாக சந்தைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களுடன் விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரின் அலுவலகத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால்நடை அனுமதி பெற்றால் மட்டுமே கால்நடை சந்தைக்கு வரும் கால்நடைகளை திருவண்ணாமலை எல்லைக்குள் மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்