கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்
சிபி சத்யராஜ் இரங்கல்
"விஜயகாந்த், ஒரு அற்புதமான நடிகர், ஒரு துணிச்சலான அரசியல் தலைவர். ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையில் உண்மையான மாஸ் ஹீரோ. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அற்புதமான ஆத்மா. அவர் இப்போது நம்மிடையே இல்லை. எங்கள் அன்புக்குரிய கேப்டன் விஜயகாந்த் சார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருப்பீர்கள்" -சிபி சத்யராஜ்
போக்குவரத்து நெரிசல்
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோயம்பேட்டில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் கோயம்பேடு 100 அடி சாலையில் செல்வதை தவிர்க்கும்படி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ரீல் மற்றும் ரியல் ஹீரோ- விஜயகாந்துக்கு சிலம்பரசன் புகழாரம்
விஜயகாந்த் மறைவு குறித்த செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். ரீல் மற்றும் ரியல் ஹீரோ என்றும் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும்’ என இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல் இன்று முழுவதும் கட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர் மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
விஜயகாந்தின் உடல் அவரது வீட்டில் இருந்து கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ராகுல் காந்தி இரங்கல்
"அரசியல் மற்றும் சினிமாவிற்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு லட்சக்கணக்கான இதயங்களில் அழியா முத்திரையாக உள்ளது. துயரமான இந்த நேரத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்"- ராகுல் காந்தி