செந்தில் பாலாஜி கைது :28-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

Update: 2023-06-14 05:13 GMT
Live Updates - Page 3
2023-06-14 07:35 GMT

செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள்

செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023-06-14 07:29 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது: பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றவர்கள் கைது!

2011-2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையின் நிறைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை கொண்டாட முயன்றவர்கள் கரூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலையில் அகில இந்திய சட்ட உரிமை கழக நிர்வாகிகள் கரூரில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அமைச்சரின் கைதை கொண்டாட முயன்ற போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-06-14 07:08 GMT

செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய இஎஸ்ஐ மருத்துவக் குழு வருகை

அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மத்திய இஎஸ்ஐ மருத்துவக் குழு வருகை வந்துள்ளனர்.

2023-06-14 06:52 GMT

மீண்டும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் வருகை வந்துள்ளார். அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த நிலையில் மீண்டும் அமைச்சர் உதயநிதி வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2023-06-14 06:39 GMT

பாஜகவை கண்டித்து கோவையில் 16-ம் தேதி திமுக கூட்டணி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடம் கழகத்தலைவர் வீரமணி கூட்டாக அறிவித்துள்ளனர். கோவையில் 16-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டனப்பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-06-14 06:20 GMT

கரூரில் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்கு சீல்

கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

2023-06-14 06:20 GMT

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை டக்டர்கர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2023-06-14 05:50 GMT

செந்தில் பாலாஜியை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை என தகவல்

ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது. இதனால், செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

2023-06-14 05:46 GMT

செந்தில்பாலாஜியின் மருத்துவ அறிக்கை: எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆலோச்சிக்கிறது அமலாக்கத்துறை

செந்தில்பாலாஜியின் மருத்துவ அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக்குழுவுக்கு அனுப்பி உள்ளது அமலாக்கத்துறை. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கையை ஆன்லைனில் அனுப்பி சரிபார்க்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்துகளை கேட்டபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-06-14 05:35 GMT

2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்