2023-06-14 05:35 GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு:பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு மீது பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை என நீதிபதிகள் தகவல்.
2023-06-14 05:27 GMT
செந்தில் பாலாஜியை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
2023-06-14 05:15 GMT
செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம்?
நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்செந்தில்பாலாஜி. இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல் எனத்தகவல் வெளியாகி உள்ளது. இசிஜியில் மாறுபாடு இருந்தால் இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.