ஊட்டியில் மது விற்றவர் சிக்கினார்

ஊட்டியில் மது விற்றவர் சிக்கினார்

Update: 2023-01-29 18:45 GMT

ஊட்டி

ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தும்மனட்டி அடுத்த குந்த சப்பையை சேர்ந்த சின்னசாமி என்ற சுட்டி என்பதும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. இதை எடுத்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்