ஜோலார்பேட்டை அருகே மது விற்றவர் கைது
ஜோலார்பேட்டை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர், பஜனை கோவில் தெரு பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சேதுக்கரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சோலையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்த குமார் (வயது 52) என்பர் மது விற்றுக்கொண்டிருந்தார்.
அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.