குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஞாறான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சோதனை நடத்திய போது பாகோடு பகுதியை சேர்ந்த சசி (வயது 40) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டதும், விற்பனைக்காக அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சசியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.