சாராயம் விற்றவர் கைது
வேதாரண்யம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் அவரிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரிக்காட்டை சேர்ந்த இளையராஜா (வயது38) என்பவா் தனது வீட்டின் அருகே சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இளையராஜாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்ைத பறிமுதல் செய்தனர்.