நெல்லை சந்திப்பு வேன் ஸ்டாண்டு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாங்குநேரியை சேர்ந்த கணேசன் (வயது 49) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரிக்க முயன்றபோது போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியும் உள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.400 ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.