குலசேகரன்பட்டினம்:
குலசேகரன் பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் மற்றும் போலீசார் உடன்குடி வாரச்சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வார சந்தை பின்புறம் உள்ள உடங்காட்டில் கடாட்சபுரம் ஆலடிதட்டை சேர்ந்த ராமசாமி மகன் திருமணி (வயது 54) மது விற்றுகொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.