கோத்தகிரி,
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்னதாக, சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் நேற்று கப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செந்தில்குமார் (வயது 43) என்பவரது கடையில் மதுபாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.