மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-30 19:48 GMT

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணப்பாறை தாலுகா சின்னமலை பட்டியை சேர்ந்த முருகவேல் (38) என்பவர் மது விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்