திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் உவரி-நாங்குநேரி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே உள்ள சுடுகாட்டில் வைத்து அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தலைவன்விளை கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களையும், ரூ.1300-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.