கம்பம் ஏகலூத்து சாலையில் தெற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே மது விற்று கொண்டிருந்த கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவை சேர்ந்த குமார் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.