மது, சாராயம் விற்றவர் கைது

ஜோலார்பேட்டை அருகே மது, சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-14 17:17 GMT

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பார்சம் பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று இருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் புது ஓட்டல் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 46) என்பதும், மது மற்றும் சாராயம் விற்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்