தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை

ஆரணி மலைப்பகுதிகளில் தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை நடந்தது.

Update: 2023-06-10 16:35 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ப.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆரணி தாலுகா பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் மலை கிராமங்களில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் வருவாய்த்துறையினர், கலால் துறை, டாஸ்மாக் மேலாளர், காவல்துறை இணைந்து சாராயவேட்டை நடத்தினர்.

இதில் அத்தியூர், பூசிமலை குப்பம், எஸ்.யூ.வனம் உள்ளிட்ட மலை பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் கோட்ட கலால் அலுவலர் தமிழ்மணி, தனி வருவாய் ஆய்வாளர் வெங்கட்ராமன், டாஸ்மாக் மேலாளர் விவேகானந்தன், போளூர் மதுவிலக்கு துறை அலுவலர்கள், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதேவி, காவல்துறையினர் இணைந்து சாராயவேட்டை நடத்தினர்.

தொடர்ந்து மலை கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் விற்பது தொடர்பான காவல்துறைக்கு புகார் அளிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்