சாராயம் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் இரும்பிலி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது காவாங்கரை பகுதியில் 2 லாரி டியூப்களில் 60 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த செல்வதுரை (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது சம்பந்தமாக செல்வதுரை மீது கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.