தலைவாசல் அடுத்த சாத்தப்பாடியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் தனபால் (வயது 25). இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் போலீசார் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 25-க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சாராய விற்பனையில் கண்ணன் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி அவரை ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்தும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று சாராய வியாபாரி தனபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்து கலெக்டர் கார்மேகம் நேற்று உத்தரவிட்டார்.