தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Update: 2023-06-07 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பேராவூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் கோவிந்தன்(வயது 38). இவர் மீது கிளியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேராவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் கோவிந்தனை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் கோவிந்தனை தடுப்புக்காவல் சட்டத்தில் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்