கபிலர்மலையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய முதியவர் கைது; 100 லிட்டர் ஊறல் கீழே கொட்டி அழிப்பு
கபிலர்மலையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய முதியவர் கைது செய்யப்பட்டார். 100 லிட்டர் ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கபிலர்மலைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது கபிலர்மலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 62) என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பிளாஸ்டிக் குடம் மற்றும் பேரலில் இருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். பின்னர் போலீசார் ராமசாமியை கைது செய்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கபிலர்மலையில் ஊருக்குள்ளேயே வீட்டில் சாராயம் காய்ச்சிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.