கயர்லாபாத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசிப்பு: 23-ந்தேதி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கயர்லாபாத்தில் சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சியில் 23-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-05-18 19:26 GMT

அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகா, பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்டு (பாரத்) லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் 2.25.0 ஹெக்டேர், புல எண். 455/1, 456/2- 456/3 கயர்லாபாத் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் லால்குடியார் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பங்கேற்கலாம். மேற்கண்ட தொழிற்திட்டங்களை பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்