போடியில் சாரல் மழை

Update: 2023-01-24 18:45 GMT

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் காலையில் பனியின் தாக்கம் குறைவாக இருந்தது. பின்னர் மாலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்