வாழ்க்கை திறன் பயிற்சி வகுப்பு

வாழ்க்கை திறன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Update: 2023-08-01 18:48 GMT

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று ஒரு நாள் வாழ்க்கை திறன் பயிற்சி வகுப்பினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாழ்க்கையில் உங்களின் திறமைகளை என்னவென்று ஆராய்ந்து அதில் நீங்கள் சாதிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற பல்வேறு நிலைகள் உள்ளன. வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர வேண்டுமானால் பெரும் தொகை செலவு ஆகும். ஆனால் தமிழகத்தில் இலவசமாகவே உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நமது மாநிலத்தில் அதிக அளவில் குறு, சிறு நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் தொழில் செய்ய தொழில் நிறுவனங்கள் மூலம் வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த பாடங்களை தேர்வு செய்து அதற்கான தொழில்நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதற்கான பொருட்களை தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பயிற்சிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். நீங்களும் இஸ்ரோ விஞ்ஞானியாகவும், தொழில் முனைவோராகவும் ஆக வேண்டும் என்றார். பின்னர் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரத்தினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்