தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-12-28 18:57 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்.

விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (வயது 43). தொழிலாளியான இவர் கடன் பிரச்சினையால் சிரமப்பட்டு வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள் (54) என்ற பெண்ணை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து சென்றார்.

இதுகுறித்து குருவம்மாளின் கணவர் ராமையா அளித்த புகாரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதியம்மாள் விசாரித்து சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்