உள்ளாட்சி தேர்தலில் தகராறு:வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனைஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு

Update: 2023-07-24 19:45 GMT

ஓசூர்

உள்ளாட்சி தேர்தலில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

முன்விரோதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனபள்ளி பக்கமுள்ள கொம்மே பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ரெட்டி (42) என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 9-5-2022 அன்று ஓசூரில், நெசவுத்தெரு அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது நரசிம்மனை பீர்பாட்டிலால் சுரேஷ்ரெட்டி தாக்கினார். இதில் படுகாயமடைந்த நரசிம்மன் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில்  நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, சுரேஷ் ரெட்டிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்