பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-14 13:25 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாத பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு உரிமம் பெற வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குழந்தைகள் இல்லம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள், பள்ளிகள், கல்லுரிகள், அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியவற்றின் கீழ் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் காப்பகங்கள் இல்லங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன் படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெறாத விடுதிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும்.

வருகிற 31-ந் தேதி

எனவே உரிமம் பெறாத விடுதிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் http://tnswp.comஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியை மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்த 18 வயதுக்கு மேற்ப்பட்டோர் பெண்கள் தங்கும் விடுதிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலும், குழந்தைகள் தங்கும் விடுதிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பித்த விவரத்தை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம் (0461-2325606), தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்