விஷம் குடித்து எல்.ஐ.சி. ஏஜெண்ட் தற்கொலை

விஷம் குடித்து எல்.ஐ.சி. ஏஜெண்ட் தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2023-09-24 20:44 GMT

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (வயது 35). எல்.ஐ.சி. ஏஜெண்ட். இவருடைய மனைவி ஜாஸ்மின் (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இம்ரான், வங்கியில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த இம்ரான் சம்பவத்தன்று விஷத்தை குடித்துவிட்டு விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இம்ரான் இறந்தார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்