கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-11-11 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சிலம்பன், பொருளாளார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டமானது, பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த கோரியும், அதேபோன்று கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும், மேலும் பணம் கட்டுவோருக்கான தவணை தொகைக்கான ஜி.எஸ்.டி. தொகையை நீக்குதல், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்குதல், குரூப் இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

போராட்த்தின் போது மழை பெய்த போதிலும், அதை பொருட்படுத்தி ்கொள்ளாமல், முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் ,ஆறுமுகம், சுரேஷ், துரைமுருகன், ஏழுமலை, பானுமதிகொளஞ்சியப்பன், கெங்காதரன், திருமாறன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்