எல்.ஐ.சி. முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. பாலிசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். காலாவதியான 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளையும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பாலிசியின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். முகவர்களின் பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். முகவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.