மன்னார்குடி
எல்.ஐ.சி. முகவர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் மன்னார்குடியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.ஏ., எப்.ஐ. சங்க மன்னார்குடி கிளையின் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் பாண்டியன், பொருளாளர் ஸ்ரீீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.ஐ.சி பாலிசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும், பாசிலி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், பாலிசி சேவை மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பாலசுந்தரம், ஜெயக்குமார், கணேசன், புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.