கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் எழுத்தாளராகவும் உள்ளார். இவர் பத்மராஜன் கந்தர்வனோ, மானிடனோ, முதுகுளம் ராகவன் பிள்ளை ஆகிய 2 நூல்களை மலையாளத்திலும், தமிழிலும் எழுதி இருந்தார். இந்த நூல்களுக்கு கிடைத்த ராயல்டி தொகை மற்றும் தன்னார்வலர்களின் உதவி தொகை மூலம் ஆனைக்கட்டி பகுதியில் பழங்குடியின குழந்தைகள் படிக்கும் வித்யாவனம் பள்ளியில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை வீடுகளுக்கும் எடுத்துச்சென்று படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பிரேமா, வேலாயுதம், சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.