சங்கராபுரத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-09-22 18:45 GMT


சங்கராபுரம், 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பூட்டை ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஒன்றிய செயலாளர் தலித்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சிந்தனைவளவன், கண்ணன், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, நகர நிர்வாகி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பூட்டை கிளை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மண்டல துணை செயலாளர் பொன்னிவளவன், வக்கீல் தென்னவன், தொகுதி செயலாளர் சிலம்பன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

பூட்டை மாரியம்மன் கோவில் மதில் சுவர் பழுதடைந்துள்ளதால் புதிய மதில் சுவர் அமைத்தல். இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியில் கால்வாய் தூர்வாரி, சுத்தமான குடிநீர் வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து பயனாளிகளுக்கும் வருடத்திற்கு கட்டாயம் 100 நாள் பணிகள் வழங்க வேண்டும். பூட்டை சுடுகாட்டில் ஈமசடங்கு செய்வதற்கு கொட்டகை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் சத்யராஜ், கண்ணன், காந்தி, கார்த்தி, பிரபு, ராமச்சந்திரன், செல்வம், மகேந்திரன் மார்ஸ் லெனின், பவளக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேசிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்