விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் பாசறை பாலு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், நகர செயலாளர்கள் பச்சையாப்பிள்ளை, இடிமுரசு, தொகுதி செயலாளர்கள் மதியழகன், அம்பிகாபதி, சிலம்பன், ஒன்றிய செயலாளர்கள் அலெக்சாண்டர், மாணிக்க நிலவன், நிர்வாகிகள் இனியன், வேலுமணி, மகளிர் அணி நிர்வாகி பவளக்கொடி, அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.