"எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர செய்வோம்" - முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு
நம் வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
சென்னை,
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர செய்வோம். நம் வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க உறுதியேற்போம். தமிழ்நாட்டில் திராவிட கட்சியின் வாரிசாக எடப்பாடி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.