ஒன்று கூடுவோம்... வென்று காட்டுவோம் - கமல்ஹாசன் டுவீட்

ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2023-01-25 13:37 GMT

சென்னை,

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தலின் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அக்கட்சியன் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.

இதையடுத்து கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிக்க்கும் விதமாக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ,

நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. ஈ.வி.கே.எஸ்.இலங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது முதல்-அமைச்சர் பதிவிட்டுள்ள டுவிட்டுக்கு பதில் அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,

ஒன்று கூடுவோம் மு.க.ஸ்டாலின், வென்று காட்டுவோம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தமிழ்நாடு வாழ்க!

என பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்