தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
சிதம்பரம் அருகே தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட நக்கரவந்தன்குடி அரசு பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சரண்ராஜ், ராஜன், பரங்கிப்பேட்டை வட்டார சமூக நல வளர்ச்சி அலுவலர்கள் மீனா, சசிகலா, பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, மக்களை தேடி மருத்துவ பணியாளர் விஷ்ணுபிரியா கலந்து கொண்டு தொழுநோயை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதில் மருத்துவ பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து உடையார்மேடு பகுதியில் மருத்துவ பணியாளர்கள் வீடு,வீடாக சென்று பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.