சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

Update: 2023-03-11 10:38 GMT

அருள்புரம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பல்லடம் வட்டார சட்டப் பணிகள் குழு சார்பில் கரைப்புதூர் ஊராட்சி சென்னிமலைபாளையத்தில் நடைபெற்றது. முகாமில் பல்லடம் வழக்கறிஞர்கள் மாரட்டின் தன்ராஜ், மகேஷ், சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு பெண்ணுரிமை பற்றியும் பெண்களுக்குஎதிரான வன்முறைகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றியும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்கள்.

இதில் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், மகளிர் சுய உதவிக்குழு பல்லடம் வட்டார தலைவர் வனராஜேஸ்வரி, அங்கன்வாடி ஆசிரியர் வடிவுக்கரசி, சுய உதவிக்குழு நிர்வாகிகள் லலிதா, உமாமகேஷ்வரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்