சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-07 19:15 GMT

சிவகாசி, 

சிவகாசி-சாத்தூர் மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.என்.எல். கல்வியியல் கல்லூரி, சாத்தூர் அரசு கல்லூரி ஆகியவை இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடியது. இதில் புதுமை பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணசாமி கல்விக்குழும தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தங்கலட்சுமி வரவேற்றார். கலெக்டர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார். ஸ்ரீகிருஷ்ணசாமி கல்லூரியின் முதல்வர் உஷாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிக்கந்தர்பீவி, மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, சாத்தூர் அரசு கல்லூரியின் முதல்வர் ஷீலாடேனியல், மாவட்ட பாதுகாப்பு அலுவலர் இந்திராஜெயசீலி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ரேச்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பி.எஸ்.என்.எல். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் சுதா தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்