தேனியில் பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் ரூ.1 கோடி முறைகேடு - 12 பேர் மீது வழக்குப்பதிவு
பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் பெண் உதவி இயக்குனர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, உத்தமபாளையம், கோம்பை, தேவநாதப்பட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சிகளில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக தேனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் கோர்ட் உத்தரவுப்படி முன்னாள் பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் 11 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.