உயர் நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி

கொள்ளிடம் ஒன்றியத்தில் உயர் நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி நடந்தது.

Update: 2023-08-28 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி துளசேந்திரபுரம், எடமணல் பள்ளிகளில் நடந்தது. பயிற்சிக்கு துளசேந்திரபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது ஆசிரியர்கள் கற்பித்தலின் பொழுது நேரடியாக கேள்வி கேட்டால் மாணவர்கள் பதில் எழுதுகின்றார்கள். மாறாக கேள்வி கேட்டால் திணறுகின்றார்கள். பல மாணவர்களுக்கு ஒரு பதிலுக்கு பல வகையில் கேள்விகள் கேட்கலாம் என்பது புரியவில்லை. அந்த புரிதலை இந்த பயிற்சி ஏற்படுத்தும். மேலும் மாணவர்களே சிந்தித்து கேள்விகளை உருவாக்கவும் இந்த பயிற்சி உதவும் என்றார். இப்பயிற்சியில் கருத்தாளர்களாக அறிவழகன், மாரியப்பன், வெங்கடேசன், ஷிபா ,பொன் ராணி, பாக்யராஜ் , கபிலன் ,ஆகியோர் ஈடுபட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, அபூர்வராணி செய்திருந்தனர். இப்பயிற்சியில் முதல் கட்டமாக தமிழ் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்