ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி பண்டிகைகள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைகளை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழக மக்கள், கல்வி, செல்வம், மற்றும் துணிவில் சிறந்து விளங்கவும் வாழ்வில் வெற்றிகளை குவிக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார்.