ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-23 18:45 GMT

ராசிபுரம்

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வக்கீல்கள் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வக்கீல் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் செல்வகுமார், தங்கதுரை, சக்திவேல் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்