சேலத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம்

சேலத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-08-31 20:03 GMT

குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக சேலம் வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு நேற்று காலை வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செயலாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்