அரசு பஸ் மோதி வக்கீல் பலி

செம்பட்டி அருகே அரசு பஸ் மோதி வக்கீல் பலியானார்.

Update: 2022-08-04 17:36 GMT

திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). வக்கீல்.  இவர், திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூர் கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். செம்பட்டி அருகே, ஆதிலட்சுமிபுரம் பிரிவு என்னுமிடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து, செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்