ஊட்டியில் சட்ட கருத்தரங்கம்

ஊட்டியில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-12-19 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில், சட்ட கருத்தரங்கம் ஊட்டி கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரபோஸ், துணைத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சுபாஷினி வரவேற்றார். இதில் சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், ஜூடிசியல் அகாடமி பயிற்சியாளருமான சந்துரு கலந்து கொண்டு பல்வேறு சட்ட நுணுக்கங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதில் உரிமையியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், போக்சோ சட்டம், குடும்ப வன்முறை சட்டம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார். இதில் அரசு வக்கீல்கள் பாபு, செந்தில் குமார், முகமது மற்றும் கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி, ஊட்டியை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்