கரூர், வெண்ணைமலையில் நேற்று தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றுப்பேசினார். கூட்டத்தில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்குபெற்ற அனைத்து கிளைச்சங்கங்களுக்கும் நன்றி தெரிவிப்பது, புதிதாக உருவாக்கப்பட்ட புத்தாம்பூர், ல.புதூர் ஆகிய 2 கிளைகள் சிறப்பாக செயல்பட, 3 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து மாவட்டத்திலும் உள்ள சலவைத்தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் வெண்ணைமலை பெரியசாமி, சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.