சலவை தொழிலாளி தற்கொலை
கடையநல்லூரில் சலவை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் பேட்டை மேற்கு மலம்பாட்டை தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 48), சலவை தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அன்பரசன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அன்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.