திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 30). சலவை தொழிலாளியான இவர் வலிப்புநோயால் அவதிப்பட்டு வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ஒருவர், சலவை செய்ய தான் கொடுத்த துணிகளை வாங்குவதற்காக நடராஜன் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் அருணாச்சலம் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.